சமூகத்தில் கொல்லர்களுக்கிருந்த மதிப்பு:
ஆயுதம் செய்தல் கொல்லனின் கடமை என்றாலும் ஈர்ந்தூர் கிழான் என்னும் மன்னன் தனக்கு வேண்டிய கருவிகளைச் செய்து தருமாறு தானே நேரடியாகச் சென்று (புறம். 180. 10-13) வேண்டி நிற்கும் அளவிற்குக் கொல்லனுக்கு அக்கால சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் இருந்துள்ளது.
“ஆந்தன் விரக்குங் காலை தானெம்
உண்ணா மருங்குல் காட்டித் தன்னூர்க்
கருங்கைக் கொல்லனை யிரக்கும்
திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே” (புறம். 180. 10-13)
என மன்னனே நேரடியாகச் சென்று முறையிட்டுள்ளதனால் சமூகத்தில் அவனுக்திருந்த மதிப்பை உணர முடிகிறது.
போர்க்களத்தில் எதிரி படையினர் முதலில் குறிவைப்பது ஆயுதம் செப்பனிடம் கம்மாளர் படையவே,,, (ஆயுதம் இல்லை எனில் போர் வீரர்களுக்கு பலமில்லை).
ஓதுவாரெல்லாம் உழுவார் தலைக்கடையில் உழுவாரெல்லாம் #கருமார் புறக்கடையில் காராளர் பெருமையெல்லாம் #கண்ணாளர் #கைத்தொழிலே “………..
(கம்பர் இயற்றிய ஏர் எழுபது என்னும் நூலிலிருந்து) … கம்பர் ஏரெழுபது எனும் நூலை இயற்றியுள்ளார்.. இதில் 10 பாடலுக்கு 1 பாடலில் கண்ணாளரை(கம்மாளர்) பற்றி பாடியுள்ளார்.
விளக்கம் ::-
வேதம் ஓதுபவரெல்லாம் அறுவடை முடிந்த பின் உழவர் வீட்டு வாசலில் தான்யத்தை பெற காத்திருப்பார்கள்..
அதே உழவர் தனக்கு வேண்டிய கருவிகளுக்காக கருமாரின்(கொல்லர்) புறக்கடையில் காத்திருப்பார்கள்.
அதே போன்று கம்மாளர் கைத்தொழிலே நாடாளும் அரசனுக்கும் பெருமையை அளிக்கிறது…