தங்கநகைத் தொழில் – பொற்கொல்லர்
பொன், வெள்ளி போன்ற விலையுயர்ந்த, பெறுமதியான உலோகங்களில் அணிகலங்கள், ஆபரணங்கள் செய்பவர்கள் பொற்கொல்லர் எனப்படுகின்றனர். இவர்களைத் தட்டார், பத்தர், ஆச்சாரி என்றும் அழைப்பர். இச்சொல் தொன்றுதொட்டு, வழிவழியாய், பாரம்பரியமாக நகைத்தொழில் செய்யும் சாதியைக் குறிக்கும்.