“எதிர்கால உலகை தீர்மானிக்கும் இடத்தில் சாதனை படைக்கும் விஸ்வபிராமணர்”
விஸ்வகுல சொந்தங்களுக்கு,
என் அருமை நண்பரும்,நம் விஜிசியின் தலைவர் “சேவைசெம்மல்”மருத்துவர் பிரம்மஸ்ரீ கனகராஜ் ஆச்சாரியார் அவர்களின் பாசத்திற்குறிய உறவினர் விஸ்வபிராமண தோன்றல் காரைக்குடியை சேர்ந்த விங்கமாண்டர் பிரம்மஸ்ரீ சிசில் மனோஜ் சுந்தர் முன்னாள் விமானபடை அதிகாரியும் டெக் உலகின் மிக சக்திவாய்ந்த நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்குனர்கள் ஒருவரும் ஆவார்.மின்னணு தொழில்நுட்ப உலகில் சாதனைகள் படைத்துவரும் இவரை பற்றி நம் சமூகத்திற்கு அறிமுகபடுத்துவதில் விஜிசி பெருமைகொள்கிறது.
காரைகுடியில் பிரம்மஸ்ரீ பொன்சுந்தர் ஆச்சாரியார்,பேராசிரியர் திருமதி பர்வத ரெஜினா பாப்பா தம்பதிகளுக்கு இரண்டாவது புதல்வர்.இவரது தாயார் காரைக்குடி அழகப்பா செட்டியார் பல்கலைக்கழக பதிவாளராகவும்,மகளிர் இயல்துறை இயக்குனராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.பங்களாதேஷில் உள்ள ஆசிய பெண்கள் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு ஆலோசகராகவும் பணியாற்றியவர்.அப்போது ஆசிய நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட 150 பெண்களை தேர்ந்தெடுத்து உயர்கல்வி அளித்து அவர்களின் வாழ்வுமேம்பட செய்தவர்,மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பலகிராமங்களில் கழிவறை வசதியும் பொதுசுகாதார வசதியும் ஏற்படுத்தி கொடுத்து உள்ளார்,பெண்கல்வி, பொதுசுகாதாரம்,மகளிர் சுய உதவி குழுக்களை உருவாக்கியது ஆகியவற்றில் இவர் ஆற்றிய சிறப்பான சேவைகளுக்காக லண்டனில் அறிஞர் பெர்னாட்ஷா அவர்களால் தொடங்கப்பட்ட “நியூஸ்டேஸ்மேன்” பத்திரிக்கை உலகைமாற்றகூடிய சக்திவாய்ந்தவர்கள் என வருடாவருடம் பத்துபேரை தேர்தெடுப்பார்கள் அதில் 2009 ஆம் வருடம் அந்த பத்து பேரில் ஒருவராக இவரை தேர்ந்தெடுத்து கவுரவித்தது.2015 ஆம் வருடத்திற்கான தமிழக அரசின் “பேராசிரியர் அண்ணா “விருதை அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் வழங்கி கவரவித்தார்.இவர் தனது 76 வயதில் மார்ச் 12 /2019 ஆம் ஆண்டு மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார்.
இத்தகைய பாரம்பரிய பின்னணி கொண்ட விங்கமாண்டர் பிரம்மஸ்ரீ சிசில் மனோஜ்சுந்தர் தமிழகத்தின் மீதும் தமிழின் மீதும் மாறாத பற்று கொண்டவர் தமிழ் இலக்கிய ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்.தான் பிறந்த விஸ்வகர்மா இனத்தின் மீது மிகுந்த அக்கறையும் மதிப்பும் கொண்டவர் விஸ்வகர்மா இனத்தின் வளர்ச்சிக்கு தன் பங்களிப்பை செய்ய ஆர்வமுடன் இருப்பவர் தமிழக அரசுடன் இணைந்து அரசு பள்ளிமாணவர்களுக்கு நவீன கணிணி தொழில்நுட்ப பயிற்சி அளிக்க மாண்புமிகு பள்ளிகல்விதுறை அமைச்சரை அமெரிக்காவிற்கே அழைத்து ஒப்பத்தம் செய்து நம் தமிழக மாணவர்களின் எதிர்கால கணிணி புரட்சிக்கு வித்திட்டவர் இதன் பலன் இனி தமிழக வருங்கால அரசு பள்ளி மாணவர்கள் இந்த உலகின் அதிசக்தி வாய்ந்த தொழிநுட்பத்தில் நிபுணத்துவம் பெறுவார்கள் அதற்க்கு வித்திட்டவர் நம் விஸ்வபிராமண சமூகத்தை சேர்ந்தவர் என்பதில் பெருமைகொள்வோம்.
என்றும் விஸ்வகுல சேவையில்,
பிரம்மஸ்ரீ வேல்முருகன் ஆச்சாரி,
விஸ்வகர்மா குளோபல் கனெக்ட் பவுண்டேசன்,
விஸ்வகர்மா குளோபல் கனெக்ட் சொசைட்டி.