மதுரை மாவட்ட விஜிசியின் உறவுகள் அனைவருக்கும் வணக்கமும் வாழ்த்துகளும்.அலுவல்ரீதியான அதிகாரப்பூர்வ பயணமாக இல்லாமல் என் தனிப்பட்ட பயணமாக நான் மதுரை வந்து இருந்தாலும் உங்களின் அளப்பரிய அன்பின் வரவேற்பாலும் பாசத்தாலும் மனம் நெகிழ்தேன்.மிகச்சிறப்பான கலந்துரையாடல்கள்,கருத்து பரிமாற்றங்கள், சீரிய சமூக சிந்தனை சமூகத்தின் பல்வேறு துறையின் ஜாம்பவான்கள்,இளைஞர்கள், பெண்கள்,பொறியாளர்கள்,நம் குலத்தொழில் செய்யும் உடன்பிறப்புகள்,சட்ட வல்லுனர்கள் என ஒவ்வொருவரின் சமூகத்தை பற்றிய பார்வை,புரிதல்கள் நம் விஜிசியை அடுத்தகட்டத்திற்க்கு எடுத்து செல்வது என நம் சொந்தங்களின் விசாலமான தெளிவான பார்வை எல்லாம் நம் சமூகத்தை அடுத்த கட்ட மாற்றத்தை நோக்கி வழி நடத்தும் என்பது தெளிவாக தெரிகிறது.இது மாதிரி மாதம் ஒருமுறை நம் விஜிசி சொந்தங்கள் நேரில் சந்தித்து களப்பணியில் தாங்கள் சந்தித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டு அடுத்த அடுத்த கட்டத்தை நோக்கி நம் மக்களை ஒருங்கிணைக்கும் பணியினை வெற்றிகரமாக எடுத்து செல்வீர்கள் என நம்புகிறேன். நம் விஜிசியின் முதன்மை மாவட்டமாக மதுரையினை கொண்டு வர செய்வீர்கள் என நம்புகிறேன்

- 0 Comments
- செய்திகள்